Government of Tamil Nadu Emblem
தமிழ்நாடு அரசு / Government of Tamil Nadu
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
Social Welfare and Women Empowerment Department
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Department logo Honourable Chief Minister
அண்ணன் சீர் திட்டம்
ANNAN SEER Scheme
அண்ணன் சீர் திட்டம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

அண்ணன் சீர் திட்டத்தின் தகுதி வரம்புகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் பயன்கள் குறித்த முழுமையான விளக்கங்கள்.

← முகப்பு / Home

திட்டத்தின் பொதுவான தகவல்கள் & தகுதிகள்

1
இத்திட்டத்தின் கீழ் யார் பயனடைவார்கள்?
குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் திருமணம் செய்யும் மணப்பெண்கள் இத்திட்டத்தின் பயனாளர்களாக இருப்பார்கள்.
2
இத்திட்டத்தின் கீழ் என்னென்ன உதவிகள் வழங்கப்படும்?
திருமணம் நடைபெறும் மணப்பெண்ணுக்கு 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
3
இத்திட்டத்தின் கீழ் பயனடைய கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
இத்திட்டத்தின் பயன் பெறுவதற்கு கல்வித் தகுதி கட்டாயமல்ல. கல்வி நிலையைப் பொருட்படுத்தாமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து தகுதியுடைய மணப்பெண்களும் திட்டத்தின் பயனை பெறலாம்.
4
இந்தத் திட்டத்தின் பயனை ஆண்கள் பெற முடியுமா?
இத்திட்டம் மணப்பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும். எனவே ஆண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது.
5
இத்திட்டத்தின் கீழ் பயனடைய மணப்பெண்ணின் குறைந்தபட்ச வயது என்ன?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணப்பெண் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
6
ஒரு குடும்பத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் அனைவரும் பயனடைய முடியுமா?
ஒரு குடும்பத்தில் தகுதியுடைய ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாவர்.

விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்

7
அண்ணன் சீர் திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?
மணப்பெண் திட்டத்தின் பயனாளி என்பதால் மணப்பெண் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
8
எங்கு விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசு இ-சேவை Citizen Login (tnesevai / annanseer.tn.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது எந்தவொரு இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இ-சேவை மைய ஆபரேட்டர் உங்கள் சார்பில் உள்நுழைந்து: e-Services -> Social Welfare Department -> SW-001 – Annan Seer Scheme என்ற சேவையின் கீழ் விண்ணப்பத்தைப் பதிவு செய்வார்.
9
விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது தேவையானவை என்னென்ன?
  • ஆதார் எண்
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் (OTP பெறுவதற்காக)
  • மணமகன் தொடர்பான விவரங்கள்
  • திருமண தேதி மற்றும் திருமணம் நடைபெறும் இடம்
  • திருமண அழைப்பிதழ் நகல் — பதிவேற்றம் செய்வதற்காக
10
ஆதார் ஏன் தேவைப்படுகிறது?
OTP மூலம் ஆதார் e-KYC செய்து உங்கள் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால்தான் விண்ணப்ப செயல்முறையைத் தொடர முடியும்.
11
ஆதார் சரிபார்ப்பு தோல்வியடைந்தால் என்ன செய்வது?
ஆதார் சரிபார்ப்பை மீண்டும் முயற்சி செய்யலாம். தொடர்ந்து தோல்வியடைந்தால், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், ஆதார் எண் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
12
கைபேசி எண்ணை ஆதார்-வுடன் இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி பயன்பெறலாம்.

தகுதிச் சரிபார்ப்பு & மேல்முறையீடு

13
எனது குடும்பத்தாரின் தகுதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
ஆதார் e-KYC முடிந்த பிறகு, உங்கள் விவரங்கள் பொது விநியோகத் திட்டம் (PDS) தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டை சார்ந்தவரா என்பது சரிபார்க்கப்படும். அதன் பின்னர், உங்கள் குடும்பத்தாரரின் விவரங்கள் கொண்டு அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
14
தகுதியில்லை என்று முடிவு செய்யப்பட்டால் நான் மேல்முறையீடு செய்ய முடியுமா?
ஆம். மேல்முறையீடு (Appeal) என்ற வசதியைப் பயன்படுத்தி மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்தவுடன் தனியான மேல்முறையீட்டு எண் (Appeal Number) உருவாக்கப்பட்டு, அது SMS மற்றும் WhatsApp மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
15
தகுதியுடையவர் என உறுதி செய்யப்பட்ட பிறகு என்ன விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்?
Aadhaar eKYC மூலம் தகுதியானவர்கள் என தெரிந்தவுடன், உங்கள் விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் விண்ணப்பத்தில் தானாகவே பூர்த்தி செய்யப்படும். பின்வரும் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்:
  • மணமகன் தொடர்பான விவரங்கள்
  • திருமண தேதி மற்றும் திருமணம் நடைபெறும் இடம்
  • திருமண அழைப்பிதழ் பதிவேற்றம்
16
Application Number என்றால் என்ன? அதை எவ்வாறு பெறுவது?
விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன் உருவாக்கப்படும் தனித்துவமான விண்ணப்ப எண்தான் Application Number. இது SMS, WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
17
Appeal Number மற்றும் Application Number ஒன்றா?
இல்லை. மேல்முறையீட்டு எண் (Appeal Number) — தகுதியற்றவர் என முடிவு செய்யப்பட்டு, அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தால் உருவாக்கப்படும். விண்ணப்ப எண் (Application Number) — விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உருவாக்கப்படும்.

அலுவலர் சரிபார்ப்பு & பயன்கள் வழங்கல்

18
திருமணத்திற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?
திருமணத்தை 15 தினங்களுக்குள் பதிவு செய்திட வேண்டும்.
19
எனது விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு தெரிந்துகொள்வது?
விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் SMS, WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். மேலும், அண்ணன் சீர் திட்டத்தின் "விண்ணப்ப நிலை / Application Status" அறியும் வசதி உள்ளது.
20
தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை எப்போது வழங்கப்படும்?
திருமணப் பதிவு மற்றும் தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு, திட்ட வழிகாட்டுதலின்படி தங்க நாணயம் மற்றும் பட்டு புடவை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் வேண்டுமா?

சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது அண்ணன் சீர் உதவி மைய எண்களை தொடர்பு கொள்ளவும்.